Senthamil.Org

ஒருத்த

தேவாரம்

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே.
ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று
பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் புஜந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் 
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் 
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய 
திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
ஒருத்த எனத்தொடங்கும் தேவாரம்