Senthamil.Org

ஒன்றொன்றொ

தேவாரம்

ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும் 
இருமூன்றொ டேழு முடனாய் 
அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும் 
அறியாமை நின்ற அரனுர் 
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று 
கொடியொன்றொ டொன்று குழுமிச் 
சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த 
திருமுல்லை வாயி லிதுவே.
ஒன்றொன்றொ எனத்தொடங்கும் தேவாரம்