Senthamil.Org

ஒன்றிய

தேவாரம்

ஒன்றிய தவத்து மன்னி 
உடையனாய் உலப்பில் காலம் 
நின்றுதங் கழல்க ளேத்தும் 
நீள்சிலை விசய னுக்கு 
வென்றிகொள் வேட னாகி 
விரும்பிவெங் கான கத்துச் 
சென்றருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.
ஒன்றிய எனத்தொடங்கும் தேவாரம்