Senthamil.Org

ஒண்டுவ

தேவாரம்

ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் 
துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங் 
குண்டர்க ளோடரைக் கூறையில்லார் 
கூறுவ தாங்குண மல்லகண்டீர் 
அண்டம றையவன் மாலுங்காணா 
ஆதியி னானுறை காட்டுப்பள்ளி 
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை 
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.
ஒண்டுவ எனத்தொடங்கும் தேவாரம்