Senthamil.Org

ஒட்டாத

தேவாரம்

ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும் 
ஓரம்பின் வாயின் வீழக் 
கட்டானைக் காமனையுங் காலனையுங் 
கண்ணினொடு காலின் வீழ 
அட்டானை ஆரூரில் அம்மானை 
ஆர்வச்செற் றக்கு ரோதந் 
தட்டானைச் சாராதே தவமிருக்க 
அவஞ்செய்து தருக்கி னேனே.
ஒட்டாத எனத்தொடங்கும் தேவாரம்