Senthamil.Org

ஒடுங்கும்

தேவாரம்

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை 
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம் 
அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம் 
அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங் 
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் 
கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி 
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் 
தூங்கானை மாடந் தொழுமின்களே.
ஒடுங்கும் எனத்தொடங்கும் தேவாரம்