Senthamil.Org

ஐவாய்

தேவாரம்

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த 
அழகா அமரர்கள் தலைவா 
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர 
நினைந்தேன் உள்ளமுள் ளளவும் 
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன் 
உகவீ ராகிலும் உகப்பன் 
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன் 
நாட்டியத் தான்குடி நம்பீ.
ஐவாய் எனத்தொடங்கும் தேவாரம்