Senthamil.Org

ஐயன்காண்

தேவாரம்

ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்புஜதப் படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
ஐயன்காண் எனத்தொடங்கும் தேவாரம்