Senthamil.Org

ஐத்தானத்

தேவாரம்

ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே
அகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீ ராகில்
நிலாவாப் புலாற்றானம் நீக்க லாமே.
ஐத்தானத் எனத்தொடங்கும் தேவாரம்