Senthamil.Org

ஏழிசையாய்

தேவாரம்

ஏழிசையாய் இசைப்பயனாய் 
 இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய் யான்செய்யுந் 
 துரிசுகளுக் குடனாகி 
மாழையொண்கண் பரவையைத்தந் 
 தாண்டானை மதியில்லா 
ஏழையேன் பிரிந்திருக்கேன் 
 என்னாரூர் இறைவனையே.
ஏழிசையாய் எனத்தொடங்கும் தேவாரம்