Senthamil.Org

ஏனவெண்

தேவாரம்

ஏனவெண் கொம்பினோடும் இளவாமையும் புஜண்டுகந்து 
கூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்ல 
மானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன் 
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
ஏனவெண் எனத்தொடங்கும் தேவாரம்