Senthamil.Org

ஏசின

தேவாரம்

ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல 
எம்பெரு மானென்றெப் போதும் 
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் 
தடிகளை அடிதொழப் பன்னாள் 
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் 
வளவயல் நாவலா ரூரன் 
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் 
இவரலா தில்லையோ பிரானார்.
ஏசின எனத்தொடங்கும் தேவாரம்