Senthamil.Org

எவரேனுந்

தேவாரம்

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட 
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது 
உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி 
இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே 
கன்றாப்புஜர் நடுதறியைக் காண லாமே.
எவரேனுந் எனத்தொடங்கும் தேவாரம்