Senthamil.Org

எழுந்துலகை

தேவாரம்

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம் 
புரமூன்றும் எழிற்கண்நாடி 
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ் 
சிலைவளைத்தோன் உறையுங்கோயில் 
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம் 
முகங்காட்டக் குதித்துநீர்மேல் 
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் 
வாய்காட்டும் மிழலையாமே.
எழுந்துலகை எனத்தொடங்கும் தேவாரம்