Senthamil.Org

எழுது

தேவாரம்

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் 
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் 
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் 
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.
எழுது கொடியிடையார் ஏழை மென்றோள் 
இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ 
முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியா லுறவணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே புஜசை செய்ய 
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.
எழுது எனத்தொடங்கும் தேவாரம்