Senthamil.Org

எழிலார்

தேவாரம்

எழிலார் இராச சிங்கத்தை 
இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக் 
குழலார் கோதை வரைமார்பிற் 
குற்றா லத்தெங் கூத்தனை 
நிழலார் சோலை நெடுங்களத்து 
நிலாய நித்த மணாளனை 
அழலார் வண்ணத் தம்மானை 
அன்பி லணைத்து வைத்தேனே.
எழிலார் எனத்தொடங்கும் தேவாரம்