Senthamil.Org

எல்லையில்புக

தேவாரம்

எல்லையில்புக ழாளனும்இமை 
யோர்கணத்துடன் கூடியும் 
பல்லையார்தலை யிற்பலியது 
கொண்டுகந்த படிறனுந் 
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் 
தூமலர்சொரிந் தேத்தவே 
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர 
மாபுரத்துறை மைந்தனே.
எல்லையில்புக எனத்தொடங்கும் தேவாரம்