Senthamil.Org

எரியொரு

தேவாரம்

எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர் 
ஏறுகந் தேறுவர் நீறுமெய் புஜசித் 
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள் 
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி 
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச 
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த 
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை 
பெருமானை உள்கி நினையார் 
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் 
திருநாரை யூர்கை தொழுவான் 
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் 
உரைமாலை பத்தும் மொழிவார் 
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க 
துளதென்பர் செம்மை யினரே.
எரியொரு எனத்தொடங்கும் தேவாரம்