Senthamil.Org

எரியார்

தேவாரம்

எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.
எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே.
எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே 
நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே 
கரியார் ஈருரியாய் கடவுஜர்தனுள் வீரட்டத்தெம் 
அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
எரியார் எனத்தொடங்கும் தேவாரம்