Senthamil.Org

எரிப்பிறைக்

தேவாரம்

எரிப்பிறைக் கண்ணியி னானை 
யேந்திழை யாளொடும் பாடி 
முரித்த இலயங்க ளிட்டு 
முகமலர்ந் தாடா வருவேன் 
அரித்தொழு கும்வெள் ளருவி 
ஐயா றடைகின்ற போது 
வரிக்குயில் பேடையொ டாடி 
வைகி வருவன கண்டேன் 
கண்டே னவர்திருப் பாதங் 
கண்டறி யாதன கண்டேன்.
எரிப்பிறைக் எனத்தொடங்கும் தேவாரம்