Senthamil.Org

ஆழ்தரு

தேவாரம்

ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் 
அமுத மமரர்க் கருளி 
சூழ்தரு பாம்பரை யார்த்துச் 
சூலமோ டொண்மழு வேந்தித் 
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித் 
தண்மதி யம்மய லேததும்ப 
வீழ்தரு கங்கை கரந்தார் 
வேட்கள நன்னக ராரே.
ஆழ்தரு எனத்தொடங்கும் தேவாரம்