Senthamil.Org

ஆலந்

தேவாரம்

ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
 ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ் 
சீலந் தான்பெரி தும்முடை யானைச் 
 சிந்திப் பாரவர் சிந்தையு ளானை 
ஏல வார்குழ லாள்உமை நங்கை 
 என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற 
கால காலனைக் கம்பனெம் மானைக் 
 காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
ஆலந் எனத்தொடங்கும் தேவாரம்