Senthamil.Org

ஆற்றையு

தேவாரம்

ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர் 
அழகினை யருளுவர் குழகல தறியார் 
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர் 
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார் 
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை 
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி 
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல் 
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
ஆற்றையு எனத்தொடங்கும் தேவாரம்