Senthamil.Org

ஆறேற்க

தேவாரம்

ஆறேற்க வல்ல சடையான் றன்னை
அஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
நீறேற்கப் புஜசும் அகலத் தானை
நின்மலன் றன்னை நிமலன் றன்னை
ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.
ஆறேற்க எனத்தொடங்கும் தேவாரம்