Senthamil.Org

ஆறேறு

தேவாரம்

ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப் 
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை 
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி 
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
ஆறேறு செஞ்சடையெம் மாரூ ரன்காண் அன்பன்காண் அணிபழன மேயான் றான்காண் நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண் நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண் கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண் கொக்கரையன் காண்குழுநற் புஜதத் தான்காண் மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
ஆறேறு எனத்தொடங்கும் தேவாரம்