Senthamil.Org

ஆறு

தேவாரம்

ஆறு வந்தணையுங் கொள்ளம் புஜதூர் 
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச் 
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ 
நல்கு மாறருள் நம்பனே.
ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.
ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங்
கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே.
ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன் 
ஆறு சூடிய அண்ட முதல்வனார் 
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள் 
ஆறு போலெம் அகத்துறை ஆதியே.
ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
நீறு தடவந் திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த புஜதங்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறுந் நடுவு முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
ஆறு எனத்தொடங்கும் தேவாரம்