Senthamil.Org

ஆர்த்தெழு

தேவாரம்

ஆர்த்தெழு மிலங்கைக் கோனை 
அருவரை அடர்ப்பர் போலும் 
பார்த்தனோ டமர் பொருது 
படைகொடுத் தருள்வர் போலுந் 
தீர்த்தமாங் கங்கை தன்னைத் 
திருச்சடை வைப்பர் போலும் 
ஏத்தஏ ழுலகும் வைத்தார் 
இன்னம்பர் ஈச னாரே.
ஆர்த்தெழு எனத்தொடங்கும் தேவாரம்