Senthamil.Org

ஆர்த்தவர்

தேவாரம்

ஆர்த்தவர் ஆடர வம்மரை 
மேற்புலி ஈருரிவை 
போர்த்தவர் ஆனையின் தோலுடல் 
வெம்புலால் கையகலப் 
பார்த்தவ ரின்னுயிர் பார்படைத் 
தான்சிர மஞ்சிலொன்றைச் 
சேர்த்தவ ருக்குறை யும்மிட 
மாந்திரு நின்றியூரே.
ஆர்த்தவர் எனத்தொடங்கும் தேவாரம்