Senthamil.Org

ஆரூர்

தேவாரம்

ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம் வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும் பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே.
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்புஜர் அம்மானே 
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வுஜரானே 
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே 
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
ஆரூர் எனத்தொடங்கும் தேவாரம்