Senthamil.Org

ஆரார்

தேவாரம்

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் 
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக் 
குறட்புஜதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா வமுதேயென் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
ஆரார் எனத்தொடங்கும் தேவாரம்