Senthamil.Org

ஆனைக்

தேவாரம்

ஆனைக் காவில் அணங்கினை 
ஆரூர் நிலாய அம்மானைக் 
கானப் பேரூர்க் கட்டியைக் 
கானுர் முளைத்த கரும்பினை 
வானப் பேரார் வந்தேத்தும் 
வாய்மூர் வாழும் வலம்புரியை 
மானக் கயிலை மழகளிற்றை 
மதியைச் சுடரை மறவேனே.
ஆனைக் எனத்தொடங்கும் தேவாரம்