Senthamil.Org

ஆதியனை

தேவாரம்

ஆதியனை எறிமணியின் ஓசை யானை
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னுல் புஜண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
ஆதியனை எனத்தொடங்கும் தேவாரம்