Senthamil.Org

ஆடை

தேவாரம்

ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச் 
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர் 
வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன் 
காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் புஜரே.
ஆடை யொழித்தங் கமணே 
திரிந்துண்பார் அல்லல் பேசி 
மூடு உருவம் உகந்தார் 
உரையகற்றும் மூர்த்தி கோயில் 
ஓடு நதிசேரும் நித்திலமும் 
மொய்த்தகிலுங் கரையில் சாரச் 
சேடர் சிறந்தேத்தத் தோன்றி 
யொளிபெருகுந் திருந ணாவே.
ஆடை எனத்தொடங்கும் தேவாரம்