Senthamil.Org

அவனென்று

தேவாரம்

அவனென்று நானுன்னை அஞ்சா தேனை 
அல்ல லறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று 
பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
அவனென்று எனத்தொடங்கும் தேவாரம்