Senthamil.Org

அழிப்பர்

தேவாரம்

அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
 ஐவ ரும்புர வாசற ஆண்டு 
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக் 
 கடைமு றைஉனக் கேபொறை ஆனேன் 
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை 
 வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில் 
இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய் 
 இடைம ருதுறை எந்தைபி ரானே.
அழிப்பர் எனத்தொடங்கும் தேவாரம்