Senthamil.Org

அற்றவ

தேவாரம்

அற்றவ னாரடி யார்தமக் 
காயிழை பங்கினராம் 
பற்றவ னாரெம் பராபர 
ரென்று பலர்விரும்பும் 
கொற்றவ னார்குறு காதவர் 
ஊர்நெடு வெஞ்சரத்தால் 
செற்றவ னார்க்கிட மாவது 
நந்திரு நின்றியூரே.
அற்றவ எனத்தொடங்கும் தேவாரம்