Senthamil.Org

மூலத்

திருமந்திரம்

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ்க செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே
மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெவiயில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே
மூலத் எனத்தொடங்கும் திருமந்திரம்