பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச இருளைத் துரந்து மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே