Senthamil.Org

நின்றும்

திருமந்திரம்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்
வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே
நின்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்