Senthamil.Org

துரிய

திருமந்திரம்

துரிய நனவாம் இதமுணர் போதம்
துரியக் கனவாம் அகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் கோன்றிடும் தானே
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந்தண வாதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே
துரிய அதீதம் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே 

 முத்தி பேதம், கரும நிருவாணம்
துரிய எனத்தொடங்கும் திருமந்திரம்