Senthamil.Org

திருநெறி

திருமந்திரம்

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும் 
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே
திருநெறி எனத்தொடங்கும் திருமந்திரம்