Senthamil.Org

ஞானம்

திருமந்திரம்

ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொரும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை ()விளைந்தருள் எட்டலு மாமே
() வளைந்தருள்
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு

ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே
ஞானம் எனத்தொடங்கும் திருமந்திரம்