Senthamil.Org

சிற்பரஞ்

திருமந்திரம்

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே 

 சிவானந்தக் கூத்து
சிற்பரஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்