Senthamil.Org

சந்தி

திருமந்திரம்

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே
சந்தி செயக்கண் டெழுகின் றா?தானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற் 
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே
சந்தி எனத்தொடங்கும் திருமந்திரம்