Senthamil.Org

ஒன்றும்

திருமந்திரம்

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே 
----------------
 கடுஞ் சுத்த சைவம்
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து 
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவடை யோரே 

 ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி
ஒன்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்