Senthamil.Org

இளைக்கின்ற

திருமந்திரம்

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் 
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்க்கழி ஏற்றம தாமே
இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே
இளைக்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்