Senthamil.Org

இட்ட

திருமந்திரம்

இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை நமக்கே
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்ட?வ் விட்டதின்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத்துஆங்கு கிரோங் கென்று மேவிடே
இட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்